இலங்கை புகையிலைக் கம்பனி பெண்களை இலக்கு வைத்து சிகரட் அறிமுகப்படுத்தியமை

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

புகையிலைத் தொழில்துறையானது, பல்வேறு விளம்பரங்கள் மற்றும் நுட்பங்கள் ஊடாக பெண்களையும், பெண் பிள்ளைகளையும் இலக்கு வைத்தமைக்கான உலகளாவிய ஆதாரங்கள் காணப்படுகின்றது.[1][2]

அறிமுகப்படுத்தப்பட்டுள்ள Famized சிகரட்: நீண்ட, அதிக மெலிதான, ஒளி வண்ணம் கொண்ட, குறைந்த தார் மற்றும் சுவை போன்றன நுட்பங்களாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. சமீபத்திய ஆதாரங்களுக்கு அமைய அபிவிருத்தியடைந்த நாடுகளில் இவ் வகையான சிகரட்டுகள் அதிகளவாகப் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவருகின்றது.[2][3][4]

இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) என்பது பிரித்தானிய அமெரிக்கப் புகையிலைக் கம்பனியின் துணை நிறுவனம் என்பதோடு இலங்கையில் புகையிலை உற்பத்தியை ஊக்குவிப்பதோடு சிகரட் தயாரிப்பு மற்றும் விநியோகத்தில் ஏகபோக நிறுவனமும் ஆகும். இலங்கை புகையிலைக் கம்பனி 2018ம் ஆண்டு பழச் சுவையுடைய சிகரட்டை அறிமுகப்படுத்தியது.

உரு 1: பழச்சுவையுடைய சிகரட் ஒன்றினை சிகரட் கம்பனி அறிமுகப்படுத்தியுள்ளதாக சண்டே டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தி.[5]

புதிய சிகரட்டை அறிமுகப்படுத்துதல்

இலங்கையின் தேசிய பத்திரிக்கை ஒன்றில் (Sunday Times) வெளிவந்த செய்திக்கு அமைவாக இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) சிவப்பு பெரி சுவையுடைய சிகரட்டை அறிமுகப்படுத்தியது. இலங்கையில் அதிகளவில் விற்பனையாகின்ற ஜோன் பிளேயர் சிகரட் வகைகளில் ஒன்றாக இந்த சிகரட் அறிமுகப்படுத்தப்பட்டது. பெயர் குறிப்பிடப்படாத கட்டுரையொன்றின் ஆய்வாளரின் கருத்துக்கு அமைய இப் புதிய சிகரட்டானது புதியவர்களை இலக்கு வைத்துள்ளது அது பெண்களாகவும் இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது(உரு 1). Asia Securities Limited ன் ஆய்வாளர் மங்கலிக்கா குணதிலக்கவின் ஆய்வறிக்கைக்கு அமைய, குறித்த புதியவகை சிகரட்டை நிரந்த பட்டியலிற்குச் சேர்ப்பதற்கு முன்னர் அதன் “செயல்திறன் மற்றும் வரவேற்பு” தொடர்பில் இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) கண்காணிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.[5][6] Asia Securities “சந்தைப்படுத்ததுல், வர்த்தக மற்றும் சர்வதேச அங்கிகாரம் பெற்ற ஆய்வு போன்றவற்றில் இலங்கையில் தாமே முன்னணியாக திகழ்கின்றோம்” என Asia Securities Limited தனது நிறுவனத்தை அதன் வலைத்தளத்தில் அறிமுகம் செய்துள்ளது.website.[7]

எவ்வாறாயினும், பத்திரிக்கையின் வாயிலாக இவ்வாறான புதிய வகை சிகரட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதென செய்திகள் வெளிவந்தாலும், எமது Tobacco unmasked குழுவினர் முயன்றும் கூட சந்தையில் அவ்வாறான சிகரட் ஒன்றினை காண முடியவில்லை.

இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) பெண்களையும், பெண் பிள்ளைகளையும் இலக்கு வைத்த வரலாறு

இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) சிகரட் விளம்பரம் மேற்கொள்ளும் போது பெண்களையும் இலக்கு வைத்தமைக்கான ஆதாரங்கள் உள்ளது. ஏற்கனவே வெளியான ஒரு ஆராய்ச்சிக் கட்டுரைக்கு அமைவாக, இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) Benson மற்றும் Hedges போன்ற சிகரட்டுகளை பெண்களை இலக்கு வைத்து விளம்பரம் செய்ததோடு, 1997ம் ஆண்டு “Golden Tones Disco” என்ற நிகழ்வில் சிகரட் புகைப்பதற்காக இலவச நுழைவுச் சீட்டினையும் வழங்கியது. அதே கட்டுரையில் கண்டியில் பிரபல பெண்கள் பாடசாலைக்கு முன்னால் உள்ள சுவரில், CTC Eagle இலச்சினை பொறிக்கப்பட்ட வீதி ஒழுங்கு தொடர்பான வாசகம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது (CTC Eagle என்பது இலங்கை புகையிலைக் கம்பனியின் துணை நிறுவனமாகும்). மேலதிக தகவல்களுக்கு CTC Eagle என்ற பக்கத்தைப் பார்க்கவும்.[8]

இலங்கை புகையிலைக் கம்பனியானது, தமது சந்தைப்படுத்தல், இலவசமாக சிகரட்டுகளை வினியோகித்தல் மற்றும் விளம்பரப் பொருளாகப் பயன்படுத்துவதற்காகப் பெண்களை இணைத்துக்கொள்கின்றத. அதே நேரம் பெண்களையும், பெண் பிள்ளைகளையும் இலக்கு வைப்பதற்காக, “கவர்ச்சியான பெண்களை” பயன்படுத்துகிறார்கள், அவர்களுக்கு கொடுப்பனவும் வழங்கப்படுகின்றது.[9]

Tobacco Unmasked வளங்கள்

குறிப்புகள்

  1. Industry Documents Library, Fw: Abc News Special - Women And Smoking, Philip Morris Records, 11th July 2001, accessed March 2019
  2. 2.0 2.1 Industry Documents Library, Invited Review Series: Tobacco And Lung Health-Women And Tobacco, Philip Morris Records, 1st January 2003, accessed March 2019
  3. Industry Documents Library, Women and Tobacco, Philip Morris Records, 1992, accessed March 2019
  4. Campaign for tobacco free kids, TOBACCO INDUSTRY TARGETING OF WOMEN AND GIRLS, undated, accessed March 2019
  5. 5.0 5.1 D. E. Chandrasekera. CTC launches ‘fruit flavoured’ cigarette, Business Times, Sunday Times, 1st July 2018, accessed March 2019 Cite error: Invalid <ref> tag; name "Business" defined multiple times with different content
  6. Sunday Times, CTC launches 'fruit flavoured' cigarette, 1st July 2018, accessed March 2019
  7. Asia Securities. About Us, website, undated, accessed April 2019
  8. Ad watch, Strategic marketing of cigarettes to young people in Sri Lanka: “Go ahead—I want to see you smoke it now”, Tamsyn Seimon, 1st December 1998, accessed March 2019
  9. Sunday times online, Plus-Lured by the fag, undated, accessed March 2019