இலங்கை புகையிலைக் கம்பனி (CTC)
Contents
பின்னணி
இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) இலங்கையில் சிகரட் உற்பத்தி செய்து விநியோகிக்கும் ஏகபோக உரிமையைக் கொண்டுள்ளது. இதில் 2017ம் ஆண்டளவில் 84.13% பங்குகளை பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனி (BAT) சொந்தமாகக் கொண்டுள்ளது.[1] 1904-1911 1904 – 1911ம் ஆண்டு காலப்பகுதியில் பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனி (BAT) இலங்கையில் தமது செயற்பாடுகளை ஆரம்பித்தாலும் 1932ம் ஆண்டில் இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) நிறுவப்பட்டது.[2][3]
இலங்கை புகையிலைக் கம்பனியானது இலங்கையில் புகையிலைப் பயிர்ச் செய்கை மற்றும் சிகரட் உற்பத்தி என முழுமையான உற்பத்தி செயல்முறையில் ஈடுபட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படுகின்ற 1% சிகரட்டை தவிர ஏனைய 99% ஆன சிகரட்டும் இலங்கை புகையிலைக் கம்பனி உற்பத்தி செய்கின்றது.[4] இலங்கையில் சிகரட் உற்பத்திக்காக பெறப்படுகின்ற புகையிலை 100 % இலங்கையிலேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. அது 2014 ஆண்டில் 3000 தொன்களாக பதியப்பட்டுள்ளது.[5] இலங்கை புகையிலைக் கம்பனியானது ஏற்றுமதி செய்கின்ற சிகரட்டின் மூலம் மொத்த வருமானத்தில் 1 % பெறுகின்றது. சிகரட் உற்பத்தியானது இரண்டு தொழிற்சாலைகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றது. கொழும்பு தொழிற்சாலை மற்றும் கண்டியில் உள்ள பசுமை இலை துவைக்கும் ஆலை என்பன அவையாகும்.[1]
இலங்கை புகையிலைக் கம்பனியின் சிகரட் வகைகளாக ஜோன் பிளயர் கோல்ட லீப் ( JPGL) டன்ஹில், பென்சன், ஹெட்ஜஸ் மற்றும் கெப்ஸ்டன் என்பன காணப்படுகின்றன.[1]
கடந்த கால மற்றும் நிகழ்கால பணிப்பாளர்கள் மற்றும் ஊழியர்கள்
இலங்கை புகையிலைக் கம்பனியானது பணிப்பாளர் சபை மற்றும் நிறைவேற்றுக் குழுவின் மூலம் நிர்வகிக்கப்படுகிறது. 2016ம் ஆண்டு தலைவரின் தலமையின் கீழ் பணிப்பாளர் சபையில் 6 உறுப்பினர்கள் அங்கம் வகித்தனர் இவற்றில் 4 பேர் நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்கள். தலமை நிறைவேற்று அதிகாரியின் தலமையிலான குழுவில் 7 அங்கத்தவர்கள் உள்ளனர். 2013ம் ஆண்டு சுசந்த ரத்நாயக CTC யின் தலைவராகவும், 2016ம் ஆண்டு மைக்கல் கொஸ்ட் தலமை நிறைவேற்று அதிகாரி/முகாமைத்துவ பணிப்பாளராக நியமிக்கப்பட்டனர்.[1] CTCயின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் மற்றும் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களை CTC வலைத்ளத்தில் பார்வையிடலாம்.
2016ம் ஆண்டில் இலங்கை புகையிலைக் கம்பனியில் நிரந்தர ஊழியர்களாக 273 பேர் இருந்ததுடன் ஒரு ஊழியரின் வருவாய் 7.3% மாக காணப்பட்டது. ஒரு ஊழியருக்கான வருவாய் 445 மில்லியன் இலங்கை ரூபாவாக இருந்ததோடு ஊழியருக்கான இலாபம் 46 மில்லியன்களாக பதிவிடப்பட்டுள்ளது.[1]
கீழ் காணப்படும் புகையிலைக் கம்பனியின் கடந்தகால மற்றும் தற்போதைய பணிப்பாளர்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் தொடர்பான தகவல்களை TobaccoUnmasked பகுதியில் பார்வையிடலாம்.
ஹெமா ரிட்லி | தினேஷ் வீரக்கொடி | டெனிஸ் பெரேரா | கென் பாலேந்திரன் | லக்மாலி நானயக்கார | மைக்கல் கொஸ்ட் | ரமேஷ் நானயக்கார | ருக்ஷன் குணதிலக | ஸ்டேன்லி வனிகசேகர | சுசந்த ரத்நாயக்க.
துணை நிறுவனங்கள்
2017ம் ஆண்டு வரை CTC ஆனது பின்வரும் துணை நிறுவனங்களாகக் கொண்டுள்ளது.
- Advent International
- CTC Briquettes Limited
- CTC Eagle
- CTC Exports Limited
- CTC Foliage Limited
- CTC Leaf Exports Limited
- Outreach Projects (Guarantee) Limited
- CTC Services Limited
முதலீட்டாளர்கள்
2016ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரை CTC யின் பங்குதாரர்களின் எண்ணிக்கை 3431 அகும். 2015ம் ஆண்டில் இருந்து 185ஆல் குறைவடைந்துள்ளது. 20 பெரிய பக்குதாரர்கள் கீழ்வருமாறு (இறங்கு வரிசையில்):[1]
British American Tobacco Holdings (Sri Lanka) BV | FTR Holdings SA | Pershing LLL SA Averbach Grauson & Co. | HSBC INTL NOM LTD - SSBT-BMO Investments 11 (Ireland) | HSBC INTL NOM LTD-State Street London | Northern Trust Company S/A - Coupland Cardiff Funds PLC | RBC Investor Services Bank-COELI SICAV | HSBC INTL NOM LTD-JPMCB-Long Term Economic Investment Fund | Jasbinderjit Kaur Piara Singh | Neesha Harnam | Harnam Holdings SDN BHD | HSBC INTL NOM LTD-SSBT Frank Russel Trust Company | HSBC INTL NOM Ltd - SSBT-Deutsche Bank | Bank of Ceylon | Bank of Ceylon No 1 Account | HSBC INTL NOM - UBS AG Zurich | HSBC INTL NOM LTD-JPMCB-New Emeging Markets | HSBC INTL NOM Ltd - UBS AG – Singapore | HSBC INTL NOM LTD-SSBT Multipartner SICAV-WMP | HSBC INTL NOM Ltd-Parametric Emerging Markets | HSBC INTL NOM LTD-BMO LGM Frontier Markets Equity Fund
அவர்கள் 97.71 பங்குகளை சொந்தமாகக் கொண்டிருந்தனர். இலங்கை வங்கியை தவிர ஏனை அனைவரும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள். [1]
குறிப்புகள்
மேற்கோள்கள்:
- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 Ceylon Tobacco Company PLC. Annual Report 2016, 2017, accessed May 2017
- ↑ British American Tobacco Website. Our history – a timeline, 2017, accessed May 2017
- ↑ Colombo Stock Exchange. Ceylon Tobacco Company PLC (CTC.N0000), 2017, accessed May 2017
- ↑ N.Arunathilake, M.Opatha, The Economics of Tobacco in Sri Lanka., Economics of Tobacco Control Paper No. 12, Tobacco Free Initiative, World Health Organization, 2003, accessed November 2016
- ↑ Sri Lanka Excise Department, Sri Lanka Excise Department Performance Report 2014, Colombo: Sri Lanka Excise Department, 2015, accessed November 2016