உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்(FCTC) - கட்டுரை 5.3

From Tobacco Unmasked Tamil
5.3.jpg
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கத்தின் கட்டுரை 5.3(FCTC) புகையிலைத் தொழில்துறையின் வணிக ரீதியிலான மற்றும் பிற நலன்களில் இருந்து பொது சுகாதாரக் கொள்கைகளை பாதுகாத்துக்கொள்வதற்கான பரிந்துரைகளை முன்வைக்கின்றது. [1]

வழிகாட்டி கொள்கைகள்

 • 1ம் கொள்கை - புகையிலைத் தொழில்துறையினால் உற்பத்தி செய்து ஊக்குவிக்கும் பொருட்களானது, நோய் மற்றும் இறப்பை ஏற்படுத்துவதோடு வறுமை உற்பட பல சமூக பிரச்சனைகளுக்கு வழிவகுகின்றது. இவ்வாறு புகையிலைத் தொழில்துறையின் தேவை மற்றும் பொது சுகாதார கொள்கை ஆகியவற்றிற்கிடையில் முரண்பாடு நிலவுகின்றது.
 • 2ம் கொள்கை - அங்கத்துவ நாடுகளானது, புகையிலை தொழில்துறை அல்லது அதன் பிரதிநிதிகளுடன் தொடர்புகளை பேணும் போது வெளிப்படையாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்படல் வெண்டும்.
 • 3ம் கொள்கை – புகையிலைத் தொழில்துறை மற்றும் அதன் பிரதிநிதிகள் அங்கத்துவ நாடுகளுடன் தொடர்பை பேணும் போது வெளிப்படையாகவும் பொறுப்புணர்வுடனும் செயற்படல் வெண்டும்.
 • 4ம் கொள்கை - புகையிலை தொழில்துறையினரின் உற்பத்திகள் மரணத்திற்கு வழிவகுக்கும் என்பதனால், அத்தொழில்துறையை நிறுவுவதற்கு அல்லது மேம்படுத்துவதற்கு ஊக்கத்தொகைகளை வழங்கக்கூடாது.

கட்டுரை 5.3ஐ நடைமுறைப்படுத்தும் வழிகாட்டிகள்[1][2]

கட்டுரை 5.3ஐ நடைமுறைப்படுத்தும் வழிகாட்டிகள் பின்வரும் நபர்களுக்கு பொருந்தும்:

 • அரசாங்க அதிகாரிகள்,
 • ஏதேனும் நாட்டின் தேசிய, மாகாண, நகராட்சி, பிரதேச அல்லது பொதுவான நிறுவனங்கள் மற்றும் அதிகார சபைகள் அல்லது அவற்றில் கடமையாற்றும் உத்தியோகத்தர்கள்,

அல்லது,

 • அவர்களிக் சார்பாக செயற்படும் எவருக்கும்.

அத்தோடு, கட்டுரை 5.3 ற்கு அமைவாக புகையிலைக் கட்டுப்பாட்டு கொள்கை மற்றும் புகையிலை தொழில்துறையினரிடம் இருந்து குறித்த கொள்ளைகளைப் பாதுகாக்க கடமைப்பட்டிருக்கும் எந்தவொரு அரச கிளை (நிறைவேற்று, சட்டமன்ற மற்றும் நீதித்துறை) என்பன இந்த செயற்பாடடை அமுல்படுத்துவதற்கு பொறுப்பாக இருக்க வேண்டும் என்று கூறுகின்றது.


வழிகாட்டிகள்

 • புகையிலை உற்பத்திகளுக்கு அடிமையாதல் மற்றும் தீங்கு விளைவிக்கும் தன்மை என்பன தொடர்பில் புகையிலை தொழில்துறையினர் புகையிலைக் கட்டுப்பாட்டு கொள்கைகள் மீதான தலையீடுகள் தொடர்பில் அனைத்து பங்காளர்களையும் விழிப்படையச் செய்தல்.
 • புகையிலை உற்பத்திகளின் அடிமைப்படுத்தும், தீங்கு விளைவிக்கும் தன்மை.
 • புகையிலை தொழில்துறையின் வணிக மற்றும் ஏனைய தலையீடுகளில் இருந்து புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை பாதுகாப்பதன் முக்கியத்துவம்.
 • புகையிலை கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் தலையீடு மேற்கொள்ள புகையிலைத் தொழில்துறையினர் முன்னெடுக்கும் தந்திரோபாய நடவடிக்கைகள் தொடர்பில்.
 • புகையிலைத் தொழில்துறையினருடனான பரஸ்பர தொடர்புகளை குறைப்பதற்கும் மற்றும் அவ்வாறான பரஸ்பர தொடர்புகளின் வெளிப்டைதன்மையயை உறுதிப்படுத்துவதற்குமான நடவடிக்கைகளை நிறுவுதல்.
அத்தியாவசியமான தேவைகளின் நிமிர்த்தம் மட்டுமே அரசாங்கங்கள் புகையிலைத் தொழில்துறையினறுடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
அவ்வாறான அத்தியாவசிய தேவைகளின் போதும் மேற்கொள்ளும் தொடர்புகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதோடு தொடர்புகள் பற்றி வெளிப்படுத்தவும் வேண்டும்.
 • புகையிலையித் தொழில்துறையினருடனான பங்காளித்துவம் மற்றும் ஒப்பந்தங்களை நிராகரித்தல் வேண்டும்.
அதற்கமைய அரசாங்கங்களினால் செய்யக் கூடாதவை:
 • புகையிலையித் தொழில்துறையினர் மற்றும் அதன் முகவர்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள், தனிப்பட்ட தொடர்புகள், நடைமுறைப்படுத்தப்படாத ஒப்பந்தங்கள் மற்றும் எல்லாவகையான தனிப்பட்ட திட்டங்கள்.
 • புகையிலையித் தொழில்துறையினினால் மேற்கொள்ளப்படுகின்ற வியாபார மேம்பாட்டுச் செயற்பாடுகள் அல்லது இளைஞர் பங்குபற்றும் பொது நிகழ்வுகள் அல்லது கல்வி நடவடிக்கைகளில் நேரடியாகவே அல்லது மறைமுகமாகவோ புகையிலைக் கட்டுப்பாட்டோடு தொடர்புள்ள செயற்பாடுகளை அனுமதியளித்தல் அல்லது வழிமொழிதல்.
 • சட்டப்பூர்வமாக செயற்படுத்தக்கூடிய புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு மாறாக, புகையிலை தொழில்துறையினரினால் பரிந்துரைக்கப்படுகின்ற நெறிமுறை அல்லது அவ்வாறான எழுத்துவடிவங்களை அனுமதித்தல் அல்லது வழிமொழிதல்.
 • புகையிலை தொழில்துறையினருடன் இணைந்து அல்லது பங்களிப்புடன் உருவாக்கப்பட்ட கொள்கைகள் அல்லது புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளை ஏற்றுக்கொள்ளுதல் அல்லது வழிமொழிதல்.
 • அரச அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கிடையிலான கொள்கை ரீதியிலான மோதல்களை தவிர்த்தல்.
புகையிலையித் தொழில்துறையினரினால், அரச நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு பெற்றுக்கொடுக்கும் கொடுப்பணவுகள், பரிசுகள், சேவைகள் மற்றும் பணம் அல்லது பணம் அல்லாத மற்றும் ஆய்வுகளுக்கான உதவி தொகை என்பன பெற்றுக்கொடுத்தலானது அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கிடையே கொள்கை ரீதியிலான மோதல்களை ஏற்படுத்தும்.
 • அரச அதிகாரிகளுக்கு, புகையிலைத் தொழில்துறையினருடன் தொடர்புகளை வைப்பது தொடர்பில் நெறிமுறைகளை கொண்டிருத்தல் வேண்டும்.
 • புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கையுடன் கொள்கை ரீதியிலான மோதல்கள் உள்ள வேட்பாளர்கள் மற்றும் குத்தகைகாரர்களுக்கு புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பாக பொது சுகாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கோ தொடர்புகளை வைத்திருப்பதற்கோ இடமளிக்கக்கூடாது.
 • புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பில் பொது சுகாதாரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்கு கடமைப்பட்டிருந்த உத்தியோகத்தரானவர் அவரின் சேவைக்காலம் முடிவுற்றதன் பின்னர் புகையிலைத் தொழில்துறையினருடன் இணைந்து செயற்படுவார் எனில், அவ்வாறு நிகழ ஏதுவான காரணங்கள் தொடர்பில் குறித்த நிறுவனத்தை அறிவுறு;துவதற்கான கொள்கைகளை உருவாக்கிக்கொள்ளல் வேண்டும்.
 • அரச அதிகாரிகளினால், புகையிலைத் தொழில்துறை பற்றிய தமது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கான தேவைப்பாடுகள் தொடர்பிலான கொள்கைகளை உருவாக்கிக்கொள்ளல் வேண்டும்.
 • அரசாங்கத்தினால் புகையிலைத் தொழில்துறை இயக்கப்படும் சந்தர்ப்பத்தை தவிர ஏனைய எந்த சந்தர்ப்பங்களிலும் அரசாங்க நிறுவனங்களினால் புகையிலைத் தொழில்துறையினருடன் நிதியியல் ரீதியிலான தொடர்புகளை தவிர்த்தல் வேண்டும்.
 • புகையிலைக் கட்டுப்பாட்டுச் செயற்பாடுகள் அல்லது பொது சுகாதாரக் கொள்கைகள்; உருவாக்கும் அல்லது நடைமுறைப்படுத்தும் எந்த ஒரு அரச நிறுவனத்திலும், குழுவிலும், ஆலோசணைக் குழுவிலும் அங்கத்தவராக செயற்படுவதற்கு புகையிலை தொழில்துறையோடு தொடர்புபட்ட எவரையும் அனுமதித்தல் கூடாது.
 • புகையிலை தொழில்துறையில் தொழில்புரியும் அல்லது புகையிலை தொழில்துறையோடு தொடர்புபட்ட ஏனைய நிறுவனங்களில் தொழில்புரியும் எந்தவொரு நபரும், பங்குதாரர்கள் ஒன்றுகூடும் கூட்டங்களில் பங்குகொள்வதற்கான அங்கத்துவத்தை வழங்கக் கூடாது.
 • எந்தவொரு அரச அதிகாரி அல்லது பகுதி அரச நிறுவன உத்தியோகத்தருக்கு புகையிலைத் தொழில்துறையினால் பெற்றுக்கொடுக்கும் கொடுப்பணவு, பரிசு மற்றும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்கு அனுமதிக்கக்கூடாது.
 • புகையிலைத் தொழில்துறையினரினால் அரசியல் கட்சிகளுக்கு, வேட்பாளர்களுக்கு அல்லது அரசியல் கூட்டங்களுக்கான பங்களிப்புகளை தடுப்பதற்கான பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும். அத்தோடு அவ்வாறான பங்களிப்புகளை வெளிப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.
 • புகையிலைத் தொழில்துறையினரினால் பெற்றுக்கொடுக்கும் தகவல்கள் வெளிப்படையானதாகவும் உண்மையானதாகவும் இருப்பதை அரசாங்கம் உறுதிப்படுத்தல் வேண்டும்
 • புகையிலைத் தொழில்துறையினரினால் மேற்கொள்ளப்படுகின்ற “சமூக பொறுப்புணர்வு” செயற்திட்டங்களை அரசாங்கம் கவனத்திற்கொண்டு அச் செயற்திட்டங்களை “கூட்டு நிறுவன சமூக பொறுப்புணர்வு” என்ற அடிப்டையில் கட்டுப்பாடுகளை விதித்து விவரிக்க வேண்டும்.
 • அரசாங்கத்தினால் புகையிலைத் தொழில்துறைக்கு எந்தவொரு முன்னுரிமையும் வழங்கக் கூடாது.
 • அரசுக்கு சொந்தமான புகையிலைத் தொழில்துறையையும் வேறு புகையிலைத் தொழில்துறையை போல் நடத்துதல் வேண்டும்.

நன்மைகள்

இந்த வழிமுறைகளின் நோக்கமானது, புகையிலைக் கட்டுப்பாட்டு கொள்கைகளை புகையிலைத் தொழில்துறை மற்றும் அத் தொழில் சார்ந்த ஏனைய அழுத்தங்களில் இருந்து பாதுகாப்பதற்கான முயற்சியாகும்.[1]==

நடைமுறைப்படுத்தல்

புகையிலைக் கட்டுப்பாட்டு கொள்கைகளை நடைமுறைப்படத்துவதற்கும் மற்றும் உறுதிசெய்வதற்கும் சட்டவாக்கம் 5.3 ன் விதிமுறைகளை நடைமுறைப்படுத்துதல், கண்காணித்தல் என்பன முக்கியமானது. புகையிலைத் தொழில்துறையை கண்காணித்தலும் இதில் உள்ளடங்கும். எனவே உலக சுகாதார ஸ்தாபனத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக புகையிலை தொழில்துறை அவதான நிலையங்கள் உலகெங்கிலும் நிறுவப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டில் முதலாவது புகையிலைத் தொழில்துறை அவதான நிலையம் நிறுவப்பட்டதோடு இரண்டாவது இலங்கையில் நிறுவப்பட்டுள்ளது. புகையிலைத் தொழில்துறையுடன் தொடர்புபடாத அரச சார்பற்ற நிறுவனங்கள், சிவில் அமைப்புகள் புகையிலைத் தொழில்துறையை அவதானிக்கும் மிக முக்கிய பொறுப்புக்களில் பங்குகொள்ள முடியும்.[1]

இலங்கையில் நடைமுறைப்படுத்தல்

இலங்கையில் புகையிலைத் தொழில்துறையை கண்காணிக்கும் பனிகளைபுகையிலைத் தொழில்துறை அவதான நிலையம்(CCT) 2016ம் ஆண்டு ஆரம்பித்தது. புகையிலைத் தொழில்துறை அவதான நிலையம் 2017ம் ஆண்டளவில் Fகொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில், நிறுவப்பட்டதோடு, அது உலக சுகாதார ஸ்தாபனத்தின் தென்கிழக்கு ஆசிய நாடுகளை அவதானிக்கும் ஒரே மையமாகவும் செயற்படுகின்றது.[1]

ஏனைய வள ஆதாரங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்: Guidelines for implementation of Article 5.3 of the WHO Framework Convention on Tobacco Control புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்.(FCTC)

குறிப்புகள்

மேற்கோள்கள்:

 1. 1.0 1.1 1.2 1.3 1.4 World Health Organization. Framework Convention on Tobacco Control, 2005, accessed March 2017
 2. World Health Organization. Guidelines for implementation of Article 5.3 of the WHO Framework Convention on Tobacco Control, 2013, accessed July 2017