துமிந்த திசாநாயக்க

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

1979ம் ஆண்டு பிறந்த துமிந்த திசாநாயக்க 2000 ஆம் ஆண்டு முதல் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார், அநுராதபுர மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் இளம் வயதில் பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினராக உள்ளார்.[1] இவர் ஹதஸ்வெல அரச பாடசாலை, ஹரிஸ்சந்திர வித்தியாலயம், அநுராதபுரம் மத்தியக் கல்லூரி மற்றும் கொழும்பு ரொயல் கல்லூரிய ஆகியவற்றில் கல்வி கற்றார். இவர் கொழும்பு சட்டக் கல்லூhயில் இளங்களை பட்டம் பெற்றவர்.[2]

மறைந்த வட மத்திய மாகாணத்தின் முன்னால் முதல்வரும், அநுராதபுர மாவட்டத்தின் முன்னால் பாராளுமன்ற உறுப்பினரும் மற்றும் முன்னாள் சமூக சேவைகள் அமைச்சருமான பேர்டி பிரேமலால் திசாநாயக்க இவரது தந்தையாவார்.[3]2010 முதல் 2015 வரை பிரதமராக இருந்த இலங்கையின் முன்னால் பிரதமர் மறைந்த டி. எம். ஜெயரத்னவின் மகள் செனானி லங்கா ஜெயரத்னவை துமிந்த திசாநாயக்க திருமணம் செய்தார்.[2][4]

அவர் இலங்கையின் இரண்டு முக்கிய கட்சிகளில் ஒன்றான இலங்கை சுதந்திரக் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துகிறார். 2010 முதல் 2015 வரையில் ஆட்சியில் இருந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டனியில் இலங்கை சுதந்திரக் கட்சி பிரதான கட்சியாக இருந்தது.[1]

உரு 1: அமைச்சர் துமிந்த திசாநாயக்க.[1]

அரசியல் மற்றும் அரசாங்கத்தில் விகத்த பதவிகள்

  • 2000 – அநுராதபுர மாவட்டத்தில் அதிக வாக்குகளைப் பெற்ற இளம் பாராளுமன்ற உறுப்பினர்.[1]
  • 2001 முதல் தற்போது வரை - நாடாளுமன்ற உறுப்பினர், அநுராதபுரம் மாவட்டம்.[1]
  • 2004 முதல் 2005 வரை – திறன் மேம்பாட்டு தொழில் மற்றும் தொழில்நுட்ப கல்வி பிரதி அமைச்சர்.[1]
  • 2005 – எஸ்.எல்.பி.பி இளைஞர் அமைப்பின் துணைத்தலைவர்.[1]
  • 2005 - எஸ்.எல்.பி.பி யின் மத்தியக் குழுவின் உறுப்பினர்.[1]
  • 2006 முதல் 2007 வரை - துறைமுகங்கள் மற்றும் விமான போக்குரவத்து பிரதி அமைச்சர்.[5]
  • 2007 முதல் 2010 ஏப்ரல் வரை- பெட்ரோலிய வள அமைச்சரவை அல்லாத அமைச்சர்.[6]
  • 2010 ஏப்ரல் முதல் 2010 நவம்பர் வரை – அஞ்சல் மற்றும் தொலைத்தொடர்புகள் பிரதி அமைச்சர்.[7]
  • 2010 நவம்பர் முதல் 2013 ஜனவரி வரை- இளைஞர் விவகாரங்கள் மற்றும் திறன் மேம்பாட்டு பிரதி அமைச்சர்.[8]
  • 2013 ஜனவரி முதல் 2014 நவம்பர் வரை – கல்விச் சேவைகள் அமைச்சர்.[9]
  • 2015 ஓகஸ்ட் முதல் 2018 ஜூன் வரை - எஸ்.எல்.பி.பி யின் பொதுச் செயலாளர்.[10]
  • 2015 ஜனவரி முதல் 2018 மே வரை - விவசாய அமைச்சர்.[11][12]
  • 2018 மே முதல் 2018 டிசம்பர் வரை – நீர்பாசனம், நீர்வளம் மற்றும் விவசாய அமைச்சர்.[13] [12]
  • 2019 நவம்பர் முதல் தற்போது வரை – தேசிய இளைஞர் விவகாரங்கள் அமைச்சர்.[14][2]

புகையிலை தொடர்பான செயற்பாடுகள்

இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) நிகழ்வில் பங்கேற்றமை

2016ம் ஆண்டு விவசாயதுறை அமைச்சராக துமிந்த திசாநாயக்க அநுராதபுரத்தில் இடம்பெற்ற நிலையான விவசாய அபிவிருத்தி செயற்திட்ட(SADP) நிகழ்வில் பங்குகொண்டார். நிலையான விவசாய அபிவிருத்தி செயற்திட்டம் (SADP) என்பது, இலங்கையில் சிகரட் உற்பத்தி செய்து விநியோகிப்பதில் ஏகபோக நிறுவனமும் பிரித்தானிய அமேரிக்க புகையிலைக் கம்பனியின்(BAT) துணை நிறுவனமுமான இலங்கை புகையிலைக் கம்பனியின்(CTC) சமூக முதலீட்டு திட்டமாகும். இந்நிகழ்வில் அவர் பங்கேற்ற போதிலும், இந்த நிகழ்வில் புகையிலை செய்கைக்கு உத்தேசிக்கப்பட்ட தடை குறித்து சாதகமாக பேசிய அவர் மாற்று பியிர்களுக்கு திரும்பிவிடுமாறு விவசாயிகளை கேட்டுக்கொண்டார்.[15]இருப்பினும், முன்மொழியப்பட்ட புகையிலைச் செய்கை மீதான தடை முன்று ஆண்டுகளுக்கு பின்னரும் (2019) விவசாய அமைச்சராக இருந்த காலத்தின் முடிவிலும் அல்லது 2020 ஜூலை வரை செயல்படுத்தப்படவி;லை.

உரு 2: இலங்கை புகையிலைக் கம்பனியின் SADP நிகழ்வில் அமைச்சர் துமிந்த திசாநாயக்க கலந்துகொண்டமை குறித்த பத்திரிக்கை செய்தி.[15]

Tobacco Unmasked வளங்கள்

Other relevant TobaccoUnmasked pages:

குறிப்புகள்

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 Parliament of Sri Lanka. Directory of Members, 2020, accessed June 2020
  2. 2.0 2.1 2.2 Manthri.lk. Duminda Dissanayake, Undated, accessed June 2020
  3. Duminda Dissanayake. Minister Duminda, Facebook, undated, accessed June 2020
  4. Parliament of Sri Lanka. Prime Ministers, 2020, accessed June 2020
  5. The Island. Development of Beira Lake, Galle Face Green begins, 30 May 2006, accessed June 2020
  6. List of Ministries and the Relavant Ministers with effect from January 28, 2007, February 2007, accessed June 2020
  7. Manjula Fernando. Major changes in downsized cabinet, Sunday Observer, 25 April 2010, accessed June 2020
  8. NEW CABINET & DEPUTY MINISTERS, 23 November 2010, accessed June 2020
  9. Sunday Times. Rs 76b for Education, Higher Education and Education Services in Appropriation Bill 2014, 27 October 2013, accessed June 2020
  10. Newsfirst. SLFP and UPFA representatives hold discussions with Elections Commissioner, 18 August 2015, accessed June 2020
  11. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka PART I : SECTION (I) — GENERAL Appointments & c., by the President, 18 January 2015, accessed June 2020
  12. 12.0 12.1 Dailymirror. Duminda Irrigation Minister, Amaraweera Minister of Agriculture, 01 May 2018, accessed January 2019
  13. Daily news. Two cabinet ministers, five state ministers appointed, 2 November 2018, accessed January 2019
  14. Presidential Secretariat. New State and Deputy Ministers sworn-in, 2019, accessed June 2020
  15. 15.0 15.1 Thisara Kamal. දුම්කොළ වගාව ඉදිරියේදී නවතා දැමීමට කටයුතු කරනවා, Ada, 03 February 2016, accessed January 2019