மஹிந்த யாபா அபேவர்தன

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

இலங்கை அரசியல்வாதியான மஹிந்த யாபா அபேவர்தன, 1945ம் ஆண்டு பிறந்தார். இவர் மாத்தறை ராகுலா கல்லூரி மற்றும் தெலிஜாவில மத்திய கல்லூரியில் கல்வி பயின்றுள்ளார். மேலும் இவர் கொழும்பு பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டமும் பெற்றுள்ளார். [1] இவரது தொழில் பொது தளங்களில் “நில உரிமையாளர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது, அதே நேரத்தில் விவசாயத்துறையானது இவரது “மிகவும் ஆர்வமுள்ள துறை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [2][3] மாத்தறை மாவட்டத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 1983 இல் உருவாக்கப்பட்ட இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் முதலாவது பாராளுமன்றத்திற்கு, நாடாளுமன்ற உறுப்பினராக நுழைந்தார். அவர் மீண்டும் 2000 ஆம் ஆண்டு தேர்தெடுக்கப்பட்டத்திலிருந்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார்.[4]

இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் 2020 க்கு முன்னதாக, மஹிந்த யாப்பா, இலங்கை சுதந்திர கட்சியிலிருந்து (SLFP) உருவாகிய இலங்கையின் இரண்டு முக்கிய அரசியல் கட்சிகளில் ஒன்றான [https://www.slpp.org/ இலங்கை பொடு ஜன பெரமுன (SLPP)) இல் சேர்ந்தார், இது புதிய அரசியல் கட்சி இலங்கை சுதந்திரக் கட்சி (SLFP) இல் சேர்ந்தார். SLFP இல் 25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி உறுப்பினராக பணியாற்றிய அவர், பின்னர் 2010 முதல் 2015 வரை ஆளும் அரசியல் கூட்டணியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியை (UPFA) உருவாக்கினார். SLPP இன் மகத்தான வெற்றியைத் தொடர்ந்து, 2020 ஆகஸ்ட் 20 ஆம் தேதி இலங்கையின் 9 வது நாடாளுமன்றத்தை கூட்டி மஹிந்த யாப்பா சபாநாயகராக பதவியேற்றார். சபாநாயகர் பதவி என்பது பாராளுமன்றத்திட்க்கு தலைமை அதிகாரியாகவும், ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு அடுத்தபடியாக மூன்றாவது அதி உயர் பதவியாகும்.[2] [2][3]

உரு 1: அமைச்சர் மஹிந்த யாபா அபேவர்தன.[1]

அரசியல் மற்றும் அரசாங்கத்தில் வகித்த பதவிகள்

 • 1983 முதல் 1988 மற்றும் 2000 முதல் தற்போது வரை- நாடாளுமன்ற உறுப்பினர் [2]
 • 1993- 1994- தென் மாகாண சபையின் தலைவர் [2]
 • 1994-2000- தென் மாகாண சபையின் முதல்வர் [2]
 • ஏப்ரல் 2004- நவம்பர் 2005 - சுகாதார மற்றும் ஊட்டச்சத்து துணை அமைச்சர் [5][3]
 • நவம்பர் 2005- ஏப்ரல் 2010 - கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய பாரம்பரிய அமைச்சர் [6][3]
 • ஏப்ரல் 2010- ஜனவரி 2015- விவசாய அமைச்சர் [7][3]
 • மார்ச் 2015- மே 2015 - நாடாளுமன்ற விவகார அமைச்சர் [8][3][9]
 • நவம்பர் 2019 முதல் தற்போது வரை - நீர்ப்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர். [10][3][1]
 • ஆகஸ்ட் 2020 முதல் தற்போது வரை - இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் நாடாளுமன்ற சபாநாயகர்.[2]

புகையிலைத் தொடர்பான செயற்பாடுகள்

இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) நிகழ்வில் பங்கேற்றமை

விவசாய அமைச்சராக இருந்த காலத்தில், மஹிந்தா யாப்பா இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) இன் சிகரெட் உற்பத்தி மற்றும் வர்த்தகத்தின் ஏகபோகத்துடன் துணை நிறுவனமான பிரித்தானிய அமெரிக்கன் புகையிலைக் கம்பனியின் (BAT) சமூக முதலீட்டு திட்டமான நிலையான விவசாய அபிவிருத்தி செயற்திட்டம் (SADP) ஊக்குவித்தார்.

 • 2014 இல் CTC இன் விவசாயிகளைப் பாராட்டும் விருது வழங்கும் விழாவில் பங்கேற்றமை. [11]
 • 2013ம் ஆண்டு SADP குடும்பங்களை ‘ஊக்குவிக்க’ வருகை தந்தமை (படம் 1 2)[12][13]

ஜூன் 2017ம் ஆண்டு, மற்றுமொரு நாடாளுமன்ற உறுப்பினரான புத்திக பதிரன, பாராளுமன்ற விவாதத்தின் போது CTCஇன் "பெருநிறுவன சமூகப் பொறுப்புணர்வு (CSR)" நடவடிக்கைகளில் மஹிந்த யாப்பாவின் ஈடுபாட்டை விமர்சித்தார்.[14]

உலக சுகாதார அமைப்பின்பு புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்.(FCTC), புகையிலை கட்டுப்பாடு குறித்த உலகளாவிய மாநாடு, கட்டுரைகள் 13 மற்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்(FCTC) - கட்டுரை 5.3 ஆகியவை கையொப்பமிடப்பட்ட நாடுகளுக்கு புகையிலை தொழில்துறையின் நிதியுதவி, CSR நடவடிக்கைகள் மற்றும் புகையிலை தொழிலுடன் அரசு அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் தொடர்புகளை தடை செய்ய வேண்டும். இலங்கையில் புகையிலை மற்றும் மதுசாரம் தொடர்பான முக்கிய சட்ட கட்டமைப்பான NATA சட்டம், “உற்பத்தியாளர்களின் விம்பத்தை ” ஊக்குவிக்கும் புகையிலை உள்ளிட்ட நேரடி மற்றும் மறைமுக விளம்பரங்களை தடை செய்கிறது.

எவ்வாறாயினும், 2011 ஆம் ஆண்டில், தனது பதவிக் காலத்தின் தொடக்கத்தில், புகையிலைப் பயிர்ச்செய்கையை அரசாங்கம் தடைசெய்யும் என்றும் மேலும் புகையிலை பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை உணவுப் பயிர்ச் செய்கையிற்கு மாற்ற ஊக்குவிக்கும் என்றும் பகிரங்கமாகக் கூறினார்.[15]இருப்பினும், உத்தேசிக்கப்பட்ட தடை ஒருபோதும் விவசாய அமைச்சராக இருந்த காலத்தில் அல்லது ஜூலை 2020 க்குள் செயல்படுத்தப்படவில்லை.

உரு 2: அமைச்சர் மஹிந்த யாபா அபயவர்தன, SADP குடும்பங்களை ஊக்குவிக்க வருகை தந்தமையை செய்தித்தாள் கட்டுரையொன்று வெளியிட்ட கட்டுரை.[13]

Tobacco Unmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்: :


குறிப்புகள்

 1. 1.0 1.1 1.2 Manthri.lk. Mahinda Yapa, Abeywardena, Undated, accessed July 2020
 2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 Parliament of Sri Lanka. Directory of Members, Undated, accessed July 2020 Cite error: Invalid <ref> tag; name "PSL" defined multiple times with different content
 3. 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 3.6 Mahinda Yapa Abeywardena. Mahinda Yapa Abeywardena, Facebook, Undated, accessed July 2020
 4. The Parliament of Sri Lanka. Directory of Past Members, Undated, accessed July 2020
 5. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka. PART I : SECTION (I) — GENERAL Appointments, &c., by the President, 10 April 2004, accessed June 2020
 6. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka. PART I: SECTION (I) — GENERAL Appointments & c., by the President, 23 November 2005, accessed June 2020
 7. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka. PART I: SECTION (I) — GENERAL Appointments &c., by the President, 22 November 2010, accessed June 2020
 8. The Gazette of the Democratic Socialist Republic of Sri Lanka. PART I: SECTION (I) — GENERAL Appointments &c., by the President, 26 March 2015, accessed June 2020
 9. Daily mirror. Four SLFP ministers resign, 21 May 2015, accessed July 2020
 10. Daily mirror. Ministry of Mahaweli, Agriculture, Irrigation & Rural Development, Undated, accessed July 2020
 11. Daily Mirror (Sri Lanka). CTC rewards farming excellence at Farmer Appreciation Awards, 31 October 2014, accessed July 2020
 12. Daily News. Agri Minister visits SADP, 17 May 2013, accessed April 2020
 13. 13.0 13.1 Daily Mirror. Agriculture Minister Visits CTC empowered Weligama villagers, 17 May 2013, accessed July 2020
 14. The Parliament of Sri Lanka. Parliamentary Debates (Hansard), Official Report, 252(9), 17 June 2017, accessed July 2020
 15. Ada Derana.lk. Govt. to ban tobacco cultivation, 18 January 2011, accessed July 2020