புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்.(FCTC)

From Tobacco Unmasked Tamil
Revision as of 12:36, 30 June 2021 by CCT-Sathuri (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
FCTC.jpg
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

உலக சுகாதார ஸ்தாபனம் என்பது (WHO) ஐக்கிய நாடுகள் சபையின் உலக பொது சுகாதாரம் தொடர்பில் செயற்படும் சிறப்பு வாய்ந்த அமைப்பாகும். புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம் (FCTC) 2003ம் ஆண்டு மே மாதத்தில் இடம்பெற்ற 56வது உலக சுகாதார பேரவையினால் (உலக சுகாதார ஸ்தாபனத்தின் தீர்மானங்களை நிறைவேற்றும் சபை) ஏற்றுக்கொள்ளப்பட்ட சர்வதேச ஒப்பந்தமாகும். இது உலக சுகாதார ஸ்தாபனத்தினால்(WHO) நிறைவேற்றப்பட்ட பொது சுகாதாரம் தொடர்பிலான முதலாவது சர்வதேச ஒப்பந்தமாகும். 2005ம் ஆண்டு தொடக்கம் அமுலாகும் இவ் ஒப்பந்தத்தில் 2017ம் ஆண்டு வரையில் 180 நாடுகள் சட்டப்பூர்வமாக கைச்சாத்திட்டுள்ளன.[1].

புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கமானது(FCTC) உலகலாவிய ரீதியில் கொள்ளை நோயாக பரவியுள்ள புகையிலைக்கு முகம்கொடுப்பதற்காக உருவாக்கப்பட்டது. புகையிலைக் கொள்ளை நோயானது உலகலாவிய ரீதியில் பரவலடைவதற்கு சாதகமான காரணிகளாக, வர்த்தக தாராளமயமாக்கல், நேரடி வெளிநாட்டு முதலீடுகள், சர்வதேச சந்தைப்படுத்தல், நாடுகடந்த புகைப்பொருள் விளம்பரங்கள், பதவி உயர்வுகள் மற்றும் அனுசரனைகள், சர்வதேச நகர்வுகள் மற்றும் சட்டவிரோத சிகரட் கடத்தல்கள் என்பன பிரதான காரணங்களாக அமைகின்றன.[2]. புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்;டவாக்கத்தின் முன்னுரையின் படி சர்வதேச சமூகமானது புகையிலை மற்றும் சிகரட் பாவனையினால் உலகலாவிய ரீதியில் சமூக பொருளாதாரம், சுற்றுசூழல் என்பன தொடர்பில் அக்கறைக் கொண்டுள்ளது. “இம்மாநாட்டின் அங்கத்துவ நாடுகள் பொது சுகாதாரத்தை பாதுகாக்கும் உரிமைகள் தொடர்பில் அதிக அக்கறையுடன் செயற்பட தீர்மானித்துள்ளதாக” மாநாட்டில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. [2] இவ் ஒப்பந்தமானது ஐக்கியநாடுகள் சபையின் வரலாற்றில் மிகவும் விரைவாக அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தங்களில் ஒன்றாக கருதப்படுவதோடு அதனால் புகையிலைப் பாவனையினால் சுகாதாரத்திற்கு ஏற்படும் பாதிப்புகள், சமூக பொருளாதார பாதிப்புகளில் இருந்து தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினரை பாதுகாப்பதில் அதன் முக்கியத்துவத்தை உயர்த்திக்காட்டுகின்றது. [2]

இலங்கை இச் சட்டவாக்கத்தில் கைச்சாத்திட்ட ஆசிய நாடுகளில் முதலாவது நாடு என்பதோடு உலகலாவிய ரீதியில் நான்காவதாக கைச்சாத்திட்ட நாடாகும்.[3]

மாநாட்டின் பிரிவுகள்

இம்மாநாடு பிரிவுகளாக அல்லது கட்டுரைகளாக பிரிக்கப்பட்டுள்ளது[2]:

 • பிரிவுகள்; 3 முதல் 5 வரை குறிக்கோள்கள், ஒப்பந்தத்தின் வழிகாட்டுதல்கள் மற்றும் பொதுவான கட்டுப்பாடுகள்.
 • பிரிவுகள்; 6முதல் 14 வரை கேள்விக் குறைப்பு நடவடிக்கைகள்.
 • பிரிவுகள்; 15 முதல் 17 வரை விநியோக குறைப்பு நடவடிக்கைகள்.
 • பிரிவு 18 சுற்றுச்சூழல் பாதுகாப்பு.
 • பிரிவு 19 பொறுப்பு.
 • பிரிவு 20 முதல் 22 வரை ஒத்துழைப்பு மற்றும் தொடர்பு.
 • பிரிவுகள் 23முதல் 26 வரை நிறுவன ஏற்பாடுகள் மற்றும் நிதி வளங்கள்.
 • பிரிவு 27 சச்சரவுகளின் தீர்வு;
 • பிரிவுகள் 28 மற்றும் 29 மாநாட்டின் அபிவிருத்திகள். மற்றும்
 • பிரிவுகள் 30 முதல் 38 வரை இறுதி விதிகள், உடன்படிக்கைக்கு இனங்குதல் மற்றும் சட்டரீதியிலான விடயங்களை உள்ளடக்கியது.

மாநாடு தொடர்பிலான மேலதிக விபரங்களை அறிய கீழுள்ள பகுதியை பார்க்கவும்:

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்(FCTC) - கட்டுரை 5.3 | புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்க கட்டுரை 7 | புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்க கட்டுரை 8 | புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்க கட்டுரை 9 | புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்க கட்டுரை 10 | புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்க கட்டுரை 11 | [[புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்க கட்டுரை 12 | புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்க கட்டுரை 14

பரிந்துரைகள்

மாநாட்டின் மூலம் பரிந்துரைக்கப்படும் உத்திகளை "MPOWER" என்ற குறிச்சொல்லின் ஊடாக விளங்கிக்கொள்ளலாம். [4]

M – புகையிலைப் பாவனை மற்றும் தடுப்புக் கொள்கைகளை கண்காணித்தல்
P – புகைப்பொருளில் இருந்து மக்களை பாதுகாத்தல்
O – புகைத்தலை நிறுத்துவதற்கு உதவி செய்தல்
W – புகையிலைப் பற்றி மக்களை எச்சரித்தல்
E – புகைப்பொருள் தொடர்பிலான விளம்பரங்கள், மேம்படுத்தல் மற்றும் அனுசரனை வழங்கும் செயற்பாடுகள் மீது தடை விதித்தல்
R – புகைப்பொருள் விலையை உயர்த்துதல்


ஏனைய இணைப்புகள்

WHO FCTC

CCT வளங்கள்

 • உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்(FCTC) - கட்டுரை 5.3
 • புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்க கட்டுரை 7
 • புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்க கட்டுரை 8
 • புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்க கட்டுரை 9
 • புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்க கட்டுரை 10
 • புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்க கட்டுரை 11
 • புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்க கட்டுரை 12
 • புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்க கட்டுரை 14

குறிப்புகள்

மேற்கோள்கள்:

 1. WHO Framework Convention on tobacco control website, 2017, accessed March, 2017
 2. 2.0 2.1 2.2 2.3 World Health Organization. Framework Convention on Tobacco Control, 2005, accessed March 2017
 3. C. Fonseka. Tobacco, alcohol and doctors. Ceylon Medical Journal. 2009, 54(3), 71–74
 4. Tobacco Free Initiative. MPOWER brochures and other resources, 2017, accessed March, 2017