மீண்டும் திறக்கப்பட்ட கிளிநொச்சி மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலையங்கள்

From Tobacco Unmasked Tamil
Revision as of 12:41, 30 June 2021 by CCT-Sathuri (talk | contribs)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

பின்னணி

புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகார சபை (NATA) சட்டம் நடைமுறைப்படுத்த அதிகாரமளிக்கப்பட்ட நால்வகையான உத்தியோகத்தர்களில் பொலிஸ் உத்தியோகத்தர்களும் உள்ளடங்குவர்.

கிளிநொச்சி மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலையங்கள் வடக்கு மாகாணத்தில் மிக முக்கியத்துவம் வாய்ந்த இரு பொலிஸ் நிலையங்களாகும். 2009ம் ஆண்டுக்கு முன்னர் யுத்தம் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகள் காரணமாக இலங்கை பொலிஸ், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் இலங்கை புகையிலைக் கம்பனி (CTC)கும் குறித்த பிரதேசத்தை நெருங்க முடியாத சூழ்நிலை இருந்தது. 2010ம் ஆண்டு இலங்கை புகையிலைக் கம்பனி (CTC)யின் அனுசரனையில் கிளிநொச்சி மற்றும் மாங்குளம் பொலிஸ் நிலையங்கள் மீள் நிறுவப்பட்டது.[1][2][3][4]

தீ. மு ஜயரத்ன அவர்களால் மாங்குளம் பொலிஸ் நிலையம் திறந்து வைக்கப்பட்;ட செய்தி Daily News செய்தி பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டது [1]

CTC முதலீடு

அச்சு ஊடகம் மற்றும் இணையத்தளங்களில் வெளிவந்த பல்வேறு செய்திகளுக்கு அமைவாக CTC இச் செயற்திட்டத்திற்கு ரூபா 130 மில்லியன் முதலீடு செய்துள்ளது.

தாக்கம்

தேசிய பத்திரிக்கை மற்றும் இணையத்தளங்களில் வெளிவந்த செய்திகளுக்கு அமைவாக, அப்போதைய பிரதமராக இருந்த தீ. மு ஜயரத்ன அவர்கள் மாங்குளம் பொலிஸ் நிலையத்தை சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கும் செய்தி 2010 டிசம்பர் 4ம் திகதி புகைப்படத்துடன் வெளிவந்தது.

  • ரூபா 130 மில்லியன் பணம் CTC செலவிட்டுள்ளது.
  • 6 மாத காலத்தில் கட்டி முடிக்கப்பட்டது
  • மீள் திறக்கப்பட்ட பொலிஸ் நிலையங்கள் ‘அதிஉயர்’ அல்லது A தரம் வாய்ந்தது
  • பிரதமர், பொலிஸ்மா அதிபர் (நாட்டில் பொலிசாருக்கு வழங்கப்படும் அதி உயர் பதவி நிலை) மற்றும் இலங்கை புகையிலைக் கம்பனி (CTC)யின் தலைவர் ஜயம்பதி பண்டாரநாயக்க ஆகியோர் வைபவத்தில் கலந்துகொண்டனர்.

The Sunday Island இணையச் செய்தி தாள் (e - paper)> வார இறுதி தேசிய பத்திரிக்கையான The Island பத்திரிக்கையில் “building modern police stations in Kilinochchi and Mankulam completed in December last year” என்ற செய்தியினை பொலிஸ் நிலையம் திறந்து 5 மாதங்களின் பின்னர் வெளியிட்டிருந்தனர் (02 ஏபரல் 2011). அதாவது பெயர் குறிப்பிடப்படாத குழுவொன்றினால் புகையிலைக் கம்பனியின் பங்குதாரர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதமொன்றில் புகைப்பொருள் பாவனையினால் ஏற்படும் தாக்கங்கள் தொடர்பில் குறிப்பிடப்படிருந்த செய்தி குறித்த இணைய பத்திரிக்கையில் வெளியிட்டிருந்ததோடு அதே செய்தியில் வடக்கு மாகாணத்தில் சிவில் நிர்வாகத்தை மீண்டும் நிறுவுதலை விரைவுபடுத்தும் நோக்கில் CTC பல சமூக நல சேவைகளை செய்வதாகவும் குறிப்பிட்டிருந்நதனர். [5]

Tobacco Unmasked வள ஆதாரங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

மேற்கோள்கள்

மேற்கோள்கள்:

  1. 1.0 1.1 SA Bandara. Development projects underway, 4 December 2010, accessed December 2017
  2. Saman. Mankulam Police station opened after 15 years, Lankadesha, 4 December 2010, accessed December 2017
  3. Ceylon Tobacco Company PLC. Annual Report 2011, 2012, accessed May 2017
  4. Daily Mirror. Two police stations reopen after 15 years. 04 December 2010
  5. Ceylon Tobacco Company PLC. http://www. ceylontobaccocompany.com/ group/sites/sri_9pmjn9.nsf/ vwPagesWebLive/DO9PMKN2/$FILE/ medMD9RPL5K.pdf?openelement Annual Report 2010],2011,accessed December 2017