இலங்கையில் புகையிலைத் தொழில்துறை

From Tobacco Unmasked Tamil
TobaccoUnmasked_Sinhala
TobaccoUnmasked_English

இலங்கை

இலங்கையானது, இந்தியப் பெருங்கடலில் 20.2 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு தீவு என்பதோடு சனத்தொகையில் 77.4% கிராமிய மக்களைக் கொண்டதாகும். இலவச சுகாதாரம் மற்றும் இலவசக் கல்வியைப் பெறும் நாட்டு மக்களின் சராசரி ஆயுட்காலம் 74.9 வயது என்பதோடு எழுத்தறிவு 93.2% ஆகும். நாட்டின் மனித அபிவிருத்தி சுட்டென் 0.757 என பதிவிடப்பட்டுள்ளது.[1] குறைந்த நடுத்தர வருமானம்கொண்ட நாடான இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியானது அமெரிக்க டொலர் 3924 ஆகும். கடந்த காலங்களில் விவசாய நாடாக அறியப்பட்ட இலங்கை, தற்போது விவசாய நடவடிக்கைகளில் கீழ்நோக்கிய போக்கை காண்பிப்பதோடு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் விவசாயம் 7.9 வீதமே பங்களிப்புச் செய்கின்றது. 2016ம் ஆண்டிற்காகப் பொருளாதார புள்ளிவிவரங்களுக்கு அமைவாக, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 56.6% என்ற மிகப்பெரிய பங்களிப்பு சேவைகளின் மூலம் கிடைத்துள்ளதோடு, இரண்டாவதாக 26.6% பங்களிப்பை தொழில்துறை வழங்கியுள்ளது. 1977ம் ஆண்டு முதல் திறந்த பொருளாதார கொள்கையைப் பின்பற்றிவரும் இலங்கை வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் தொழில்துறையினருக்கு ஏதுவான சூழலை உருக்கிக் கொடுத்துள்ள நாடாகக் காணப்படுகின்றது.[2][3]

1505 முதல் 1948ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் பல சந்தர்ப்பங்களில் ஐரோப்பியர்களின் காலனித்துவத்திற்கு ஆளான இலங்கை முறையே போர்த்துக்கேயர், ஒல்லாந்தர் மற்றும் பிரித்தானியரின் ஆட்சியின் கீழ் இருந்தது. புகையிலையானது முதன்முதலில் போர்த்துக்கேயரால் அறிமுகப்படுத்தப்பட்டதோடு அவர்களாலேயே புகைப்பழக்கம் அறிமுகமாகியதாக ஊகிக்கப்படுகின்றது.[4] பிரித்தானிய அமெரிக்க புகையிலைக் கம்பனியின்(BAT) கிளை நிறுவனமொன்று 1906ம் ஆண்டு இலங்கையில் நிறுவப்பட்டதோடு அது 1936ம் ஆண்டு இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) என அழைக்கப்பட்டது.[5] சிலோன் என அழைக்கப்பட்ட நாட்டில் புகையிலைக் கம்பனின் பெயரும் சிலோன் என ஆரம்பிக்கும் வகையில் (Ceylon Tobacco company)பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியிலேயே நடைபெற்றது.[6]

இலங்கையில் புகைப்பொருள் பாவனை

உரு 1: இலங்கையில் ஆண்களின் சிகரட் பாவனையின் போக்கு[7]

உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் இலங்கை சுகாதார அமைச்சு என்பன 2015ம் ஆண்டு தொற்றா நோய்களுக்கு அடிப்படைக் காரணிகளைக் கண்டறிய மேற்கொண்ட ஆய்விற்கு அமைய, 18 தொடக்கம் 69 வயதிற்கு உட்பட்டவர்களில் 15% ஆனோர் புகைப்பழக்கம் உள்ளவர்கள் எனக் கண்டறியப்பட்டது. தினமும் புகைப்பவர்களின் அளவு 10.2% என்பதோடு மொத்த ஆண் சனத்தொகையில் அது 29.4% என்பதுடன் புகைக்கும் பெண்களின் அளவு 0.1% ஆகும்.[8]

மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளுக்கு அமைய 15வயதிற்கு மேற்பட்ட ஆண்களின் புகைப்பழக்கமானது 1990ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் குறைந்துச் செல்வதைக் காட்டுகின்றது. (உரு 1).[7]

அந்த ஆய்விற்கு அமையப் புகைப்பவர்களில் 91 வீதமானோர் புகைப்பது சிகரட் எனவும் 8 வீதமானவர்கள் பாவிப்பது வீடுகளில் தயாரிக்கப்படும் பீடி எனவும் கண்டறியப்பட்டுள்ளது [7] எனினும் சிகரட் கம்பனியின் தர்க்கமாக அமைவது 2009ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் புகைப்பொருள் பாவிப்பவர்களில் 40 -45 வீதமானவர்கள் புகைப்பது பீடி எனக் குறிப்பிடுகின்றனர். அதிகளவிலான உள்நாட்டு ஆய்வு நிறுவனங்களின் தரவுகளுக்கு அமையப் பீடி பாவனையானது புகைப்பொருள் பாவனையாளர்களில் 10 வீதத்திலும் குறைவாகவே உள்ளது. மேலதிக தகவல்களுக்குப் [[எனினும் சிகரட் கம்பனியின் தர்க்கமாக அமைவது 2009ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் புகைப்பொருள் பாவிப்பவர்களில் 40 -45 வீதமானவர்கள் புகைப்பது பீடி எனக் குறிப்பிடுகின்றனர். அதிகளவிலான உள்நாட்டு ஆய்வு நிறுவனங்களின் தரவுகளுக்கு அமையப் பீடி பாவனையானது புகைப்பொருள் பாவனையாளர்களில் 10 வீதத்திலும் குறைவாகவே உள்ளது. மேலதிக தகவல்களுக்குப் புகையிலை தொழில்துறையின் தர்க்கம் - பீடி பாவனை அதிகரிக்கின்றது என்ற பகுதியைப் பார்க்கவும். .[6]

புகையிலைப் பாவனையின் பாதிப்பு

2015ம் ஆண்டு கணக்கெடுப்பிற்கு அமைவாக வாராம் ஒன்றிற்கு 222 பேர் புகைத்தலினால் மரணமடைவதோடு இலங்கையில் வயது வந்த 10 பேரில் ஒருவரின் மரணம் புகைத்தலினால் நிகழ்கின்றது.[9] இலங்கை புகையிலைக் கம்பனியின் அறிக்கைகளுக்கு அமைய 2015ம் ஆண்டில் அவர்களின் வருமானம் 106.5 பில்லியின் ரூபாவாகும், இத் தகவலானது இலங்கை புகைத்தலினால் ஏற்படும் பொருளாதார பிரச்சனையை எடுத்துக்காட்டுகின்றது. [6][10]

இலங்கையில் புகையிலைத் தொழில்துறை

புகையிலை நிறுவனங்கள் மற்றும் சந்தை பங்குகளின் உரிமம்

இலங்கை புகையிலைக் கம்பனியானது(CTC) இலங்கையில் சிகரட் உற்பத்தியில் ஏகபோக உரிமையைக்கொண்டுள்ள நிறுவனமாகும். புகையிலைச் செய்கை, சிகரட் உற்பத்தி செய்தல், சில்லறை வியாபாரிகள், விநியோகம் என சிகரட் உற்பத்தியோடு தொடர்புடைய அனைத்து துறைகளையும் இலங்கை புகையிலைக் கம்பனி மேற்கொள்கின்றது. இலங்கை புகையிலைக் கம்பனியின் உரிமத்தில் மிகவும் சிறியதொரு பங்கினை உள்நாட்டு பங்குதாரர்கள் கொண்டுள்ளதோடு 2015 ம் ஆண்டு இலங்கை புகையிலைக் கம்பனியின் அறிக்கைக்கு அமைவாக, 84.13% உரிமம் பிரித்தானிய அமெரிக்கப் புகையிலைக் கம்பனியைச் சாரும். [6] உலக வங்கி அறிக்கைக்கு அமைவாக, இலங்கையில் விற்பனை செய்யப்படுகின்ற 99% சிகரட்டுகளை இலங்கை புகையிலைக் கம்பனி உற்பத்தி செய்வதோடு 1% சிகரட்டுகள் இறக்குமதி செய்யப்படுகின்றது.[11] 2008ம் ஆண்டு ஜோன் கீல்ஸ் பங்குதாரர் நிறுவனம் வெளிட்ட அறிக்கையில், சிகரட் சந்தையில் 96மூ பங்குகள் புகையிலைக் கம்பனிக்கு சொந்தமாக இருப்பதுடன் சட்டவிரோத சிகரட்டுகள் 4% என குறிப்பிடப்பட்டிருந்தது. [12] இலங்கையில் புகையிலைச் சந்தை வீழ்ச்சியடைந்துள்ளது, இந்த வீழ்ச்சிக்குப் பிரதான காரணமாக 2006ம் ஆண்டு தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படும் புகையிலை மற்றும் மதுசாரம் மீதான தேசிய அதிகாரச் சபை(NATA) சட்டம் காணப்படுகின்றது. அச்சட்டத்தின் படி மறைக்கப்பட்ட பொது இடங்கள், உணவகங்கள் மற்றும் பொது இடங்கள் போன்றவற்றில் புகைத்தல் மற்றும் மதுபாவனை தடை செய்யப்பட்டதோடு தொடர்ச்சியான மதுவரி அதிகரிப்பும் இச் வீழ்ச்சிக்குக் காரணமாகும்.[12]

அம்பா தனியார் ஆய்வு நிறுவனம் 2013ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வறிக்கையின் படி புகையிலை பாவனை குறைந்துச்செல்கின்றது. இவ்வீழ்ச்சிக்குக் காரணமாக அவர்கள் முன்வைப்பதானது, தொடர்ச்சியான விலை அதிகரிப்பு மற்றும் சிகரட் உட்படப் புகையிலைப் பாவனை தொடர்பான சுகாதார விழிப்புணர்வு. அவ் ஆய்வில் மேலும் கூறப்படும் விடையங்களானது, 2010, 2011ம் ஆண்டுகளில் சிகரட் பாவனை அதிகரிப்பைக் காட்டியதோடு யுத்தம் நிறைவுற்ற நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உருவான புதிய சந்தைவாய்ப்பு இதற்குக் காரணமாகும்.[5]

புகையிலை விவசாயம் மற்றும் புகைப்பொருள் உற்பத்தி

இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகின்ற சிரட்டுக்கான புகையிலை 100% உள்நாட்டிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படுவதோடு 2014 ஆண்டில் மட்டும் 3000 டொன் புகையிலை அவ்வாறு சிகரட் உற்பத்திக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.[6][13][6]

இதற்கு மேலதிகமாக மேலும் மூன்று புகைப்பொருள் உற்பத்தி நிறுவனங்கள் இலங்கையில் நிறுவப்பட்டுள்ளது.[14];

  • United Tobacco Processing Pvt Ltd
  • Thansher and Company
  • Agio Tobacco Processing Company Pvt Ltd

விநியோகம், வர்த்தகம் மற்றும் பங்கீடு

புகையிலைக் கம்பனியின் அறிக்கையின் படி புகைப்பொருள் விநியோகத்தில் ஈடுபடும் 16 தெரிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. 72000 சில்லரை வியாபாரிகள் உள்ளனர். அதிகளவான சிகரட்டுகளை விற்பனை செய்வதற்கெனவும், வியாபாரிகளை ஊக்குவிப்பதற்கெனவும் இலங்கை புகையிலைக் கம்பனி (CTC) அபிஷேகம் என்று அழைக்கப்படும் செயற்திட்டம் ஒன்றினையும் நடைமுறைப்படுத்துகின்றது.[6] இலங்கை புகையிலைக் கம்பனியின் 2015ம் ஆண்டு இலாபம் (வரி செலுத்திய பின்னர்) ரூபா.10.5 பில்லியன்களை விடச் சற்று அதிகம். அது சராசரியாக 69 அமெரிக்க டொலர் மில்லியன்களாகும்.[6]

பொருளாதார பின்னணி – வரி, ஏற்றுமதி மற்றும் தொழில் வாய்ப்புகள்

வரி

அரசின் வரி வருமானத்திற்கு இலங்கை புகையிலைக் கம்பனியிடம் இருந்து கிடைக்கும் வரியானது மொத்த வரி வருவாயில் 7% ஆகும்.[6]

ஏற்றுமதி

அரசுக்கான ஏற்றுமதி வருமானத்தில் 1% புகையிலை கம்பனி ஏற்றுமதி செய்யும் சிகரட்டின் மூலம் கிடைக்கின்றது.[6].[14] Sri Lanka Directory of Exporters, இலங்கை ஏற்றுமதியாளர்களின் பட்டியலின்படி, பின்வரும் நிறுவனங்கள் புகையிலைசார் உற்பத்திகளை ஏற்றுமதி செய்கின்றன: [14]

  • United Tobacco Processing Pvt Ltd – சிகரட் மற்றும் புகையிலையை ஏற்றுமதி செய்கின்றது
  • Thansher and Company – சுருட்டு ஏற்றுமதி செய்கின்றது
  • Agio Tobacco Processing Company Pvt Ltd – அரை உற்பத்தி செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை ஏற்றுமதி செய்கின்றது.

தொழில் வாய்ப்பு

இலங்கை புகையிலைக் கம்பனியின் மதிப்பீட்டின் படி, அவர்கள் வழங்கும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கை 181000 ஆகும். இலங்கை புகையிலைக் கம்பனியின் 2015ம் ஆண்டு வருடாந்த அறிக்கைக்கு அமையப் புகையிலைக் கம்பனியின் தொழில் செய்பவர்களின் எண்ணிக்கை 238 மட்டுமே ஆகும். மேலும் 55 பேர் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்கின்றனர்.[6] இலங்கையில் புகையிலைச்சார் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள ஏனைய நிறுவனங்களில் தொழில் செய்பவர்களின் விபரம்:

  • United Tobacco Processing Pvt Ltd - 1875.[15]
  • Thansher and Company - between 250-499.[16]
  • Agio Tobacco Processing Company Pvt Ltd – 1800[17]

சமூக முதலீடு

இலங்கை புகையிலைக் கம்பனியினால் உருவாக்கப்பட்ட மற்றுமொரு நிறுவனத்தின் ஊடாக (Outreach Projects (Guarantee) Limited) சமூக முதலீட்டுச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றது. அதற்காக 2015ம் ஆண்டு செலவிடப்பட்டுள்ள தொகை ரூபா. 47 மில்லியன்களாகும்.[6] மேலதிக தகவல்களுக்கு நிலையான விவசாய அபிவிருத்தி செயற்திட்டம் (SADP) | SADP Plus | SADP Lite | கங்காராம விஹாரை வெசாக் வலையம் | நா செவன சமூக அபிவிருத்தித் திட்டம் என்ற பகுதியைப் பார்க்கவும்

TobaccoUnmasked வளங்கள்

தொடர்புடைய ஏனைய TobaccoUnmasked பக்கங்கள்:

மேலதிக வளங்கள்

குறிப்புகள்

மேற்கோள்கள்:

  1. Department of Census and Statistics, Census of Population and Housing, 2012, 2012, accessed November 2016
  2. Central Bank of Sri Lanka. Sri Lanka Socio-economic data 2016, June 2016, accessed March 2017
  3. World Bank. Sri Lanka Development Policy Review, 08 December 2004, accessed March 2017
  4. C.G.Uragoda, A History of Medicine in Sri Lanka. Colombo: Sri Lanka Medical Association, 1987
  5. 5.0 5.1 Amba Research Private Limited. Ceylon Tobacco Company PLC, 31st October 2013, accessed March 2017
  6. 6.00 6.01 6.02 6.03 6.04 6.05 6.06 6.07 6.08 6.09 6.10 6.11 Ceylon Tobacco Company, Ceylon Tobacco Company Annual Report 2015, 2016, accessed November 2016
  7. 7.0 7.1 7.2 Alcohol and Drug Information Centre, ADIC Spot Survey July 2015, 2016, accessed November 2016
  8. Ministry of Health, Nutrition and Indigenous Medicine, Sri Lanka. Non-communicable Disease Risk Factor Survey, Sri Lanka 2015, Colombo: Ministry of Health/World Health Organization, 2016, accessed November 2016
  9. M.Eriksen, J.Mackay, N.Schulger, et.al.The Tobacco Atlas. Fifth Ed., Atlanta: American Cancer Society, 2015, accessed November 2016
  10. V.De Silva, D.Samarasinghe, R.Hanvella. Association between concurrent alcohol and tobacco use and poverty. Drug and Alcohol Review. 2011,30:69–73
  11. N.Arunathilake, M.Opatha, The Economics of Tobacco in Sri Lanka., Economics of Tobacco Control Paper No. 12, Tobacco Free Initiative, World Health Organization, 2003, accessed November 2016
  12. 12.0 12.1 S Rajasekaran. Ceylon Tobacco Company (CTC): Corporate Update, September 2008, accessed March 2017
  13. Sri Lanka Excise Department, Sri Lanka Excise Department Performance Report 2014, Colombo: Sri Lanka Excise Department, 2015, accessed November 2016
  14. 14.0 14.1 14.2 Sri Lanka Export Development Board. Sri Lanka Directory of Exporters, 2017, accessed March 2017
  15. United Tobacco Processing Pvt Ltd. Factories, undated, accessed March 2017
  16. Kompass International. the Thansher and Company, undated, accessed March 2017
  17. European Chamber of Commerce of Sri Lanka. Agio Tobacco Processing Co. (Pvt) Ltd., undated, accessed March 2017