Main Page

From Tobacco Unmasked Tamil

TobaccoUnmasked_Tamil பகுதிக்கு அன்புடன் வரவேற்கின்றோம்

TobaccoUnmasked_Tamil என்பது புகையிலை தொழில்துறை அவதான நிலையத்தின் தகவல் தளமாகும்.

புகையிலை தொழிற்றுறை தொடர்பான தகவல்கள் ஆதாரப்பூர்வமாக உள்ளடக்கப்படுவதுடன் இலங்கையில் இயங்கும் புகையிலை நிறுவனம் தொடர்பாகவும் அதனூடு தொடர்புடைய உத்தியோகத்தர்களினது சுயவிபரங்களும் தகவல்களின் ஒரு பகுதியாக உள்ளடக்கப்பட்டுள்ளது. பல்வேறு தொடர்புகள் வாயிலாக புகையிலை தொழிற்றுறையுடன் இணைந்திருக்கும் நண்பர்கள், நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தொடர்பான சுயவிபரங்களும் இவ்விணையத்தளத்தின் பக்கங்களில் உள்ளடக்கப்பட்டுள்ளது.

மேலும், அமுல்படுத்தப்படும் சட்டங்களில் செல்வாக்கு செலுத்துவதற்கு, புகையிலை வரி மற்றும் விலை தொடர்பான பிரச்சினைகள், சமூகத்திற்கான முதலீட்டுப் பங்களிப்பு, புகையிலை உற்பத்தி மற்றும் விற்பனை மேம்படுத்தல் ஆகியவற்றிற்கு புகையிலைத் தொழிற்றுரையினரால் மேற்கொள்ளப்பட்ட தந்திரோபாயங்கள் தொடர்பிலும் Tobacco Unmasked – Tamil விகி பகுதி விபரிக்கின்றது.

Tobacco Unmasked - Tamil இல் எவ்வாறு தகவல்களை கண்டறியலாம்.

தகவல்களை தேடி அறிந்து கொள்வதற்கு:

எம்மைப் பற்றி

(CCT) என்பது இலங்கையில் அமைந்திருக்கும் புகையிலை தொழில்துறை அவதான நிலையமாகும். இது உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்(FCTC) - கட்டுரை 5.3 இன் உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்.(FCTC) இற்கு கீழ் கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவப்பீடத்தால் நிறுவப்பட்டது. இலங்கை மற்றும் பிராந்தியத்தில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்டவாக்கம்(FCTC) - கட்டுரை 5.3 உடன் தொடர்புடைய புகையிலை தொழிற்றுறையின் நடவடிக்கைகள் அமுல்படுத்துகையை கண்காணிப்பதே இதன் பிரதான இலக்காகும்.

எமது பங்குதாரர்களாக http://adicsrilanka.org/ மதுசாரம் போதைப்பொருள் தகவல் நிலையம் (ADIC Sri Lanka)], வைத்திய சங்கத்தின் (SLMA),மற்றும் மதுசாரம், புகையிலை உட்பட சட்டவிரோத போதைப்பொருட்கள் தொடர்பில் அனுபவம் வாய்ந்த குழு , மதுசாரம் மற்றும் புகையிலை மீதான தேசிய அதிகார சபை (NATA) ஆகியோர் இணைந்துள்ளனர்.

தொடர்பான சட்டவாக்கக் காரியாலயம் (FCTC Convention Secretariat)] மற்றும் நுரையீரல் சார் நோய்கள் மற்றும் சயரோகத்திற்கு எதிரான சங்கம் (The Union) ஆகியோர் பூரணமான அனுசரனையை பெற்றுத்தரும் அதே வேளை, Iக்கிய நாட்டின் பாத் பல்கலைக்கழகத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு ஆய்வுக்குழு (Tobacco Control Research Group) மற்றும் கெலிபோனியாபல்கலைக்கழகத்தின் புகையிலைக் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மற்றும் கல்வி (Centre for Tobacco Control Research and Education) கெலிபோனியா பல்கலைக்கழகத்தின் புகையிலைக்கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மற்றும் கல்வி; என்பன தொழிநுட்ப உதவிகளை வழங்குகின்றன. இவ் விகி பகுதி பாத் பல்கலைக்கழகத்தின் TobaccoTactics விகி பகுதியினை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது.

Tobacco Unmasked புதிய தகவல்கள்

11 மே 2024 - புகையிலை மற்றும் மதுபானம் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து ரணில் விக்கிரமசிங்க பற்றிய எங்கள் பக்கத்தைப் புதுப்பித்தோம். மேலும் படிக்க பக்கத்தைப் பார்வையிடவும்.

எமது புதிய பக்கத்தை பார்வையிடலாம்

முக்கிய தலைப்புகள்:

கீழ்க் காணப்படும் முக்கிய தலைப்புகளை கிளிக் செய்வதன் மூலம் இலங்கையில் புகையிலைத் தொழில் துறையின் செயற்பாடுகள் மற்றும் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம். பக்கங்களை ஒவ்வொரு முக்கிய தலைப்பின் கீழ் வகைப்படுத்துவதற்குக் காரணம் உள்ளதா? தயவு செய்து எமது முக்கிய தலைப்புகளை கிளிக் செய்து பாருங்கள்.

பின்னணி

தேசிய மற்றும் சர்வதேச ரீதியான புகையிலைக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள், கொள்கைகள் மற்றும் புகையிலைத் தொழில்துறையின் தந்திரோபாயங்கள் என்பனவற்றை உள்ளடக்கிய பக்கங்கள்.

புகையிலை தொழிற்றுறை

புகையிலைத் தொழில்துறையுடன் நேரடியாகத் தொடர்புடைய பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்.

புகையிலைத் தொழில்துறையின் செயற்பாடுகள்

புகையிலைத் தொழில்துறையின் செயற்பாடுகள் தொடர்பான பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்

புகையிலைத் தொழில்துறையின் வாதங்கள் மற்றும் பிரதிபலிப்புகள்

புகையிலைத் தொழில்துறையின் வாதங்கள் மற்றும் பிரதிபலிப்புகள் தொடர்பான பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்

புகையிலைத் தொழில்துறையுடன் தொடர்புள்ள நிறுவனங்கள்

புகையிலைத் தொழில்துறையுடன் தொடர்புடைய நிறுவனங்கள் தொடர்பான பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்

புகையிலைத் தொழில்துறையுடன் தொடர்புள்ள தனி நபர்கள்

புகையிலைத் தொழில்துறையுடன் ஏதேனும் வகையில் தொடர்புள்ள அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள், பிரபலங்கள், கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் பொது பிரமுகர்கள் தொடர்பான பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்

புகையிலைக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளில் எதிராகத் தலையீடு செய்யும் தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள்

புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகள் அல்லது நடவடிக்கைகளில் தாமதத்தை ஏற்படுத்த அல்லது புகையிலைத் தொழில்துறைக்குச் சார்பாக நடந்துகொள்ளும் அதே நேரம் ஒப்புவிப்பதற்கு போதுமான சாட்சிகள் இல்லாத தனி நபர்கள் மற்றும் நிறுவனங்கள் தொடர்பான பக்கங்கள் பின்வரும் கருப்பொருளின் கீழ் அடங்கும்.


caption


caption


Partner Organizations

caption


caption


caption

Useful Links


caption

caption

ஆதாரங்கள் பற்றிய கண்டிப்பான கொள்கை

TobaccoUnmasked_Tamil விகி பகுதியில் பிரசுரிக்கப்படும் அனைத்து தகவல்களுக்குமான ஆதாரங்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுக்கமான கொள்கை பின்பற்றப்படுகின்றது.பிரசுரமாகியுள்ள தகவல்களிற்கு கீழே வழங்கப்பட்டிருக்கும் மூலவளப்பட்டியலை அழுத்துவதன் மூலம் குறிப்பிட்ட தகவலிற்கான ஆதாரங்களை அறிந்துக் கொள்ளலாம்.பிரசுரங்களாவன நிருபர்களால் எழுதப்பட்டு பிரதான ஆசிரியரால் மீளாய்வு செய்யப்பட்டு பிரசுரிப்பதற்கு முன்னர் மீண்டும் நுணுக்கமான மதிப்பாய்வு செய்யப்பட்டேவெளியிடப்படும்.

தகவல்களின் மீள்பாவனை மற்றும்மூலவளங்களின் விநியோகம்

Tobacco unmasked விகி பகுதியில் வெளியிடப்படும் தகவல்களைப் புகையிலைத் தொழில்துறை அவதான நிலையத்தின் எழுத்துரிமையுடன் இலவசமாக பிரதி செய்துகொள்ளும் அதே நேரம் வியாபார நோக்கமற்ற அனைத்து விடயங்களுக்கும் பயன்படுத்தலாம். எழுத்துரிமை – புகையிலைத் தொழில்துறை தொடர்பான அவதான நிலையம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பீடம், TobaccoUnmasked_Tamil, 2017 எனக் குறிப்பிடத் தவற வேண்டாம்.

நன்றி நவில்தல்

Tobacco unmasked தகவல் பலகுத்திற்குத் தேவையான ஆதாரங்கள், மூளவளங்களை பெற்றுத்தரும் மதுசாரம் மற்றும் போதைப்பொருள் தகவல் நிலையத்தின் நூலகத்திற்கு எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

5.3 கட்டுரையின் சட்டங்களை மீறும் செயற்பாடுகளை அறியத்தருவதற்கு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் புகையிலைக் கட்டுப்பாடு தொடர்பான சட்ட வாக்கத்தின் பரிவு 5.3 மீதான மீறுதல்கள் மற்றும் புகையிலைக் கட்டுப்பாட்டுக் கொள்கைகளைப் பாதிக்கும் வகையிலான தொழில்துறையின் நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொடுக்க நீங்களும் தொடர்புகொள்ளலாம். (+94) 076 923 3435 மற்றும் (+94) 011 258 1571

எம்முடன் தொடர்பு கொள்ளுவதற்கு

தகவல்கள் வழங்குவதற்கு நீங்களும் எமக்கு ஒத்துழைக்கலாம் அல்லது நிறுவனம் சாரா புலனாய்வு நிருபர்களாகவும் இணைந்து கொள்ளலாம். எமது விகி பகுதியை விருத்திசெய்வதற்காக உங்களின் கருத்துக்களை வரவேற்கின்றோம் tobaccounmasked@gmail.com எனும் மின்னஞ்சல் வாயிலாக தங்களின் கருத்துக்களை அனுப்பி வைக்கலாம்.